திருப்பாவை பாடல் 25
ஒருத்தி மகனாய் பிறந்து ஓரிரவில்
ஒருத்தி மகனாய் ஒளித்து வளர
தரிக்கிலா னாகித்தான் தீங்கு நினைந்த
கருத்தைப் பிழைப்பித்து கஞ்சன் வயிற்றில்
நெருப்பென்ன நின்ற நெடுமாலே! உன்னை
அருத்தித்து வந்தோம் பறைதருதி யாகில்
திருத்தக்க செல்வமும் சேவகமும் யாம்பாடி
வருத்தமும் தீர்ந்து மகிழ்ந்தேலோர் எம்பாவாய்.
பொருள்:
ஒருத்தி மகனாய் பிறந்து ஓரிரவில்
ஒருத்தி மகனாய் ஒளித்து வளர
தரிக்கிலா னாகித்தான் தீங்கு நினைந்த
கருத்தைப் பிழைப்பித்து கஞ்சன் வயிற்றில்
நெருப்பென்ன நின்ற நெடுமாலே! உன்னை
அருத்தித்து வந்தோம் பறைதருதி யாகில்
திருத்தக்க செல்வமும் சேவகமும் யாம்பாடி
வருத்தமும் தீர்ந்து மகிழ்ந்தேலோர் எம்பாவாய்.
பொருள்:
தேவகியின்
மைந்தனாக
நள்ளிரவில்
பிறந்தவனே!
அன்று
இரவே
யசோதையிடம்
ஒளிந்து
வளர்வதற்காகச் சென்றவனே! அவ்வாறு மறைந்து
வளர்வதைப்
பொறுக்க
முடியாத
கம்சன்
உன்னை
அழிக்க
வேண்டும்
என்று
நினைத்தான்.
அந்த
கருத்து
அழியும்
வகையில்,
அவனது
வயிற்றில்
பயத்தால்
ஏற்படும்
நெருப்பை
விளைவித்த
உயர்ந்த
குணங்களையுடைய திருமாலே! உனது அருளை
யாசித்து
நாங்கள்
வந்தோம்.
அந்த
அருளைத்
தந்தாயானால்,
உனது
விரும்பத்தக்க செல்வச்சிறப்பையும், பக்தர்களுக்காக நீ
செய்த
பணிகளையும்
பாராட்டி
நாங்கள்
பாடுவோம்.
உனது
பெருமையைப்
பாடுவதால்,
துன்பங்கள்
நீங்கி
இன்பமாய்
மகிழ்ந்திருப்போம்.
விளக்கம்:
விளக்கம்:
பக்தன்
பக்தி
செலுத்தும்
போது,
இறைவன்
அவனுக்கு
சேவகனாகி
விடுகிறான்.
தனது
உயிருக்குயிரான பக்தன் பிரகலாதனுக்கும் அவனது
தந்தை
இரணியனுக்கும் வாதம் நடக்கிறது. "உன்
நாராயணன்
எங்கே
இருக்கிறான்?
என்று
இரணியன்
கேட்க,
பெருமாளுக்கு
கை,
கால்
உதறி
விடுகிறது.
உடனே
உலகிலுள்ள
எல்லா
ஜீவன்களுக்குள்ளும் அவன் சென்று
விட்டான்.
ஒரு
அணுவைக்
கூட
அவன்
பாக்கி
வைக்கவில்லை.
பிரகலாதன்
என்ன
பதில்
சொன்னாலும்
அதற்குள்
இருந்து
வெளிப்பட
வேண்டுமே
என்ற
பயத்தில்
அவன்
இருந்தான்.
அவன்
"தூண்
என்று
சொல்லவே,
அதற்குள்ளும்
மறைந்திருந்த
பகவான்,
நரசிம்மமாய்
வெளிப்பட்டார். பக்தனுக்கு அவர் செய்த
சேவையைப்
பார்த்தீர்களா! தன்னிடம் பக்தி செலுத்திய
பாண்டவர்களுக்காக அமாவாசை நேரத்தையே மாற்றிய
தயாள
குணம்
படைத்த வரல்லவா!
இவற்றையெல்லாம் படித்தாலே நாம் அவனை
அடைந்து
விடலாம்
என்பது
இப்பாடலின்
உட்கருத்து.
திருப்பள்ளியெழுச்சி - பாடல் 5
பூதங்கள் தோறும் நின்றாய் எனின் அல்லால்
போக்கிலன் வரவிலன் என நினைப் புலவோர்
கீதங்கள் பாடுதல் ஆடுதல் அல்லால்
கேட்டறியோம் உனைக்கண்டறிவாரை
சீதங்கொள் வயல் திருப்பெருந்துறை மன்னா!
சிந்தனைக்கும் அரியாய்! எங்கள் முன்வந்து
ஏதங்களறுத்து எமை யாண்டருள் புரியும்
எம்பெருமான் பள்ளி எழுந்தருளாயே.
பொருள்:
பூதங்கள் தோறும் நின்றாய் எனின் அல்லால்
போக்கிலன் வரவிலன் என நினைப் புலவோர்
கீதங்கள் பாடுதல் ஆடுதல் அல்லால்
கேட்டறியோம் உனைக்கண்டறிவாரை
சீதங்கொள் வயல் திருப்பெருந்துறை மன்னா!
சிந்தனைக்கும் அரியாய்! எங்கள் முன்வந்து
ஏதங்களறுத்து எமை யாண்டருள் புரியும்
எம்பெருமான் பள்ளி எழுந்தருளாயே.
பொருள்:
குளிர்ந்த
வயல்கள்
சூழ்ந்த
திருப்
பெருந்துறையில் உறையும் சிவபெருமானே! சிந்தனைக்கு
எட்டாதவனே!
நீர்,
நிலம்,
நெருப்பு,
காற்று,
ஆகாயம்
என்ற
ஐந்துபூதங்களிலும் நீயே இருக்கிறாய். நீ
எங்கும்
போவதும்
இல்லை,
வருவதும்
இல்லை.
இவ்வாறு
புலவர்கள்
உன்னுடைய
சிறப்பியல்புகளை கீதங்களால் பாடுகிறார்கள், பக்தர்கள்
இந்தப்
பெருமைகளைச்
சொல்லி
ஆடுகிறார்கள்.
இப்படி
பாடியாடுபவர்களும் உன்னை நேரில் பார்த்ததில்லை. உன் திருக்காட்சியைக் கண்டவர்கள்
யாருமில்லை.
அப்படிப்பட்ட
நீ
எங்கள்
முன்பாக
வந்து,
எங்கள்
பாவங்களையெல்லாம் தீர்த்து எங்களை ஆட்
கொள்ள
வேண்டும்.
அதற்காக,
உடனே
துயில்
நீங்கி
எழுவாயாக
.
விளக்கம்:
.
விளக்கம்:
"போக்கிலன்
வரவிலன்
என்று
சிவபெருமான்
போற்றப்படுகிறார். அதாவது, இறைவன் பிறப்பும்
இறப்பும்
இல்லாதவன்
என்று
இதற்குப்
பொருள்.
அவன்
நிரந்தரமானவன், அவனுடைய மூலத்தை அறிந்து
கொள்ள
முயற்சிப்பவர்கள் அறிவீனர்களாகவே இருக்க முடியும்.
எத்தனை
நூல்களை
ஆய்வு
செய்தாலும்,
இதைக்
கண்டு
பிடிக்க
முடியாது.
எனவே,
நம்
சக்திக்கு
மீறிய
அந்த
பரமனைப்
பாடி
மகிழ்ந்தாலே
அவன்
நம்
கண்ணுக்குத்
தெரிந்து
விடுவான்
என்பது
இப்பாடல்
உணர்த்தும்
கருத்து.
No comments:
Post a Comment