திருப்பாவை பாடல் 30
வங்கக்கடல் கடைந்த மாதவனை கேசவனை
திங்கள் திருமுகத்து சேயிழையார் சென்றிறைஞ்சி
அங்கப் பறைகொண்ட வாற்றை அணி புதுவை
பைங்கமலத் தண்தெரியல் பட்டர்பிரான் கோதை சொன்ன
சங்கத்தமிழ்மாலை முப்பதும் தப்பாமே
இங்குஇப் பரிசுரைப்பார் ஈரிரண்டு மால்வரைத்தோள்
செங்கண் திருமுகத்து செல்வத்திருமாலால்
எங்கும் திருவருள் பெற்று இன்புறுவர் எம்பாவாய்.
பொருள்:
வங்கக்கடல் கடைந்த மாதவனை கேசவனை
திங்கள் திருமுகத்து சேயிழையார் சென்றிறைஞ்சி
அங்கப் பறைகொண்ட வாற்றை அணி புதுவை
பைங்கமலத் தண்தெரியல் பட்டர்பிரான் கோதை சொன்ன
சங்கத்தமிழ்மாலை முப்பதும் தப்பாமே
இங்குஇப் பரிசுரைப்பார் ஈரிரண்டு மால்வரைத்தோள்
செங்கண் திருமுகத்து செல்வத்திருமாலால்
எங்கும் திருவருள் பெற்று இன்புறுவர் எம்பாவாய்.
பொருள்:
அலைகள் நிறைந்த
பாற்கடலைக்
கடைந்த
மாதவனும்,
கேசி
என்ற
அரக்கனைக்
கொன்ற
கேசவனுமான
கண்ணனை,
சந்திரனைப்
போன்ற
அழகு
முகம்
கொண்ட
அணிகலன்
அணிந்த
பெண்கள்
சிரமப்பட்டு
தரிசித்து,
பாவை
விரத
பலன்
பெற்ற
விபரத்தை
ஸ்ரீவில்லிப்புத்தூரில் பிறந்த, குளிர்ந்த
தாமரை
போன்ற
முகத்தையுடைய
பெரியாழ்வாரின் பெண்ணான ஆண்டாள், இனிய
தமிழில்
முப்பது
பாடல்
பாடி
பாமாலை
தொடுத்திருக்கிறாள். இதனை படிப்பவர்கள்,
உயர்ந்த
தோள்களை
யுடையவனும்,
அழகிய
கண்களைக்
கொண்ட
திருமுகத்தை
உடையவனும்,
செல்வத்துக்கு அதிபதியுமான திருமாலின் ஆசியுடன்
எங்கு
சென்றாலும்
செல்வச்செழிப்பு பெற்று இன்பமுடன் வாழ்வர்.
திருப்பள்ளியெழுச்சி - பாடல் 10
புவனியில் போய் பிறவாமையில் நாள் நாம்
போக்குகின்றோம் அவமே இந்தப் பூமி
சிவன் உய்யக் கொள்கின்றவாறென்று நோக்கி
திருப்பெருந்துறையுறைவாய் திருமாலாம்
அவன் விருப்பெய்தவும் மலரவன் ஆசைப்படவும்
நின்னலர்ந்த மெய்க்கருணையும் நீயும்
அவனியிற் புகுந்தெமை ஆட்கொள்ள வல்லாய்
ஆரமுதே! பள்ளி எழுந்தருளாயே!
பொருள்:
புவனியில் போய் பிறவாமையில் நாள் நாம்
போக்குகின்றோம் அவமே இந்தப் பூமி
சிவன் உய்யக் கொள்கின்றவாறென்று நோக்கி
திருப்பெருந்துறையுறைவாய் திருமாலாம்
அவன் விருப்பெய்தவும் மலரவன் ஆசைப்படவும்
நின்னலர்ந்த மெய்க்கருணையும் நீயும்
அவனியிற் புகுந்தெமை ஆட்கொள்ள வல்லாய்
ஆரமுதே! பள்ளி எழுந்தருளாயே!
பொருள்:
திருப்பெருந்துறையில் வசிக்கும்
சிவனே!
பூமியில்
பிறந்த
அடியார்களெல்லாம் சிவனால் ஆட்கொள்ள படுகிறார்கள்.
ஆனால்,
நாம்
பூமியில்
பிறக்காத
காரணத்தால்
வீணாக
நாளை
போக்குகின்றோம் என்று திருமாலும், அவனது
உந்தித்தாமரையில் பிறந்த மலரவனான பிரம்மாவும்
வருந்துகின்றனர். எனவே நீ, உண்மையான
கருணையுடன்
இந்த
உலகிற்கு
வந்து
எங்களை
ஆட்கொள்ள
வல்லவனாய்
இருக்கிறாய்.
எவருக்கும்
கிடைக்காத
அமுதமே!
நீ
பள்ளி
எழுந்தருள்வாயாக!
No comments:
Post a Comment