திருவெம்பாவை – பாடல் 9
முன்னைப் பழம் பொருட்கும் முன்னைப் பழம்பொருளே
பின்னைப் புதுமைக்கும் பேர்த்தும் அப்பெற்றியனே
உன்னைப் பிரானாகப் பெற்ற உன் சீர் அடியோம்
உன்னடியார் தாள் பணிவோம் அங்கு அவர்க்கே பாங்காவோம்
அன்னவரே எம் கணவர் ஆவார்
அவர் உகந்து சொன்ன பரிசே தொழும்பாய் பணி செய்வோம்
இன்னவகையே எமக்கு எம் கோன் நல்குதியேல்
என்ன குறையும் இலோம் ஏலோர் எம்பாவாய்.
பொருள்:
முன்னைப் பழம் பொருட்கும் முன்னைப் பழம்பொருளே
பின்னைப் புதுமைக்கும் பேர்த்தும் அப்பெற்றியனே
உன்னைப் பிரானாகப் பெற்ற உன் சீர் அடியோம்
உன்னடியார் தாள் பணிவோம் அங்கு அவர்க்கே பாங்காவோம்
அன்னவரே எம் கணவர் ஆவார்
அவர் உகந்து சொன்ன பரிசே தொழும்பாய் பணி செய்வோம்
இன்னவகையே எமக்கு எம் கோன் நல்குதியேல்
என்ன குறையும் இலோம் ஏலோர் எம்பாவாய்.
பொருள்:
கோடி வருடங்களுக்கும் முற்பட்ட பழமையான பொருள்
இது
என்று
சொல்லப்படும்
பொருட்களுக்கெல்லாம் பழமையானவனே! இன்னும்
லட்சம்
ஆண்டுகள்
கழித்து
இப்படித்தான்
இருக்கும்
இந்த
உலகம்என்று
கணிக்கப்படும் புதுமைக்கெல்லாம் புதுமையான சிவனே!
உன்னை
தலைவனாகக்
கொண்ட
நாங்கள்,
உனது
அடியார்களுக்கு மட்டுமே பணிவோம். அவர்களுக்கே
தொண்டு
செய்வோம்.
உன்
மீது
பக்தி
கொண்டவர்களே
எங்களுக்கு
கணவராக
வேண்டும்.
அவர்கள்
இடும்
கட்டளைகளை
எங்களுக்கு
கிடைத்த
பரிசாகக்
கருதி,
மிகவும்
கீழ்ப்படிதலுடன் பணி செய்வோம். இந்த
பிரார்த்தனையை மட்டும் நீ ஏற்றுக்
கொண்டால்,
எங்களுக்கு
எந்த
குறையும்
இல்லை
என்ற
நிலையைப்
பெறுவோம்.
விளக்கம்:
விளக்கம்:
"தனக்கு
வரும்
கணவன்,
சாப்ட்வேர்
இன்ஜினியராக
இருக்க
வேண்டும்,
அழகாக
இருக்க
வேண்டும்,
வாகனம்
வைத்திருக்க
வேண்டும்
என்றெல்லாம்
பிரார்த்திப்பர்வர்கள் பெருகி விட்ட
காலம்
இது!
இந்த
செல்வம்
நிலைத்திருக்குமா! இந்த செல்வத்துக்கு சொந்தக்காரர்கள் ஒழுக்கசீலர்களாக இருப்பார்களா! பக்திமான்
ஒருவன்
எனக்கு
கணவனாக
வேண்டும்
என்று
கேட்பவர்கள்
விரல்
விட்டு
எண்ணும்
அளவிலாவது
இன்று
இருக்கிறார்களா? அன்றைய பெண்கள் தங்கள்
கணவன்
பக்திமானாக
அமைய
வேண்டுமென
விரும்பினர்.
அதை
இறைவனிடம்
கேட்டனர்.
செல்வச்சீமான்களால் நிம்மதியைத் தர
முடியாது.
பக்திமான்களை
மணந்தால்
எளிய
வாழ்க்கை
அமையலாம்.
ஆனால்,
அதில்
இருக்கும்
மனநிம்மதி
யாருக்கு
கிடைக்கும்?
என்பது
இந்தப்
பாடலின்
உட்கருத்து.
திருப்பாவை பாடல் 9
தூமணி மாடத்து சுற்றும் விளக்கெரிய
தூபம் கமழத் துயிலணை மேல் கண்வளரும்
மாமன் மகளே! மணிக்கதவம் தாள் திறவாய்
மாமீர்! அவளை எழுப்பீரோ? உன்மகள் தான்
ஊமையோ அன்றிச் செவிடோ, அனந்தலோ?
ஏமப்பெருந்துயில் மந்திரப்பட்டாளோ?
மாமாயன் மாதவன் வைகுந்தன் என்றென்று
நாமம் பலவும் நவின்றேலோர் எம்பாவாய்.
பொருள்:
தூமணி மாடத்து சுற்றும் விளக்கெரிய
தூபம் கமழத் துயிலணை மேல் கண்வளரும்
மாமன் மகளே! மணிக்கதவம் தாள் திறவாய்
மாமீர்! அவளை எழுப்பீரோ? உன்மகள் தான்
ஊமையோ அன்றிச் செவிடோ, அனந்தலோ?
ஏமப்பெருந்துயில் மந்திரப்பட்டாளோ?
மாமாயன் மாதவன் வைகுந்தன் என்றென்று
நாமம் பலவும் நவின்றேலோர் எம்பாவாய்.
பொருள்:
பிரகாசமான நவரத்தினங்
களால்
கட்டப்பட்ட
மாளிகையில்,
சுற்றிச்சூழ
விளக்கெரிய,
நறுமணதிரவியம் மணம் வீச, அழகிய
பஞ்சுமெத்தையில் உறங்கும் எங்கள் மாமன்
மகளே!
உன்
வீட்டு
மணிக்கதவைத்
திறப்பாயாக.
எங்கள்
அன்பு
மாமியே!
அவளை
நீ
எழுப்பு.
உன்
மகளை
எத்தனை
நேரமாக
நாங்கள்
கூவி
அழைக்கிறோம்!
அவள்
பதிலே
சொல்லவில்லையே! அவள் ஊமையா? செவிடா?
சோம்பல்
அவளை
ஆட்கொண்டு
விட்டதா?
அல்லது
எழ
முடியாதபடி
ஏதாவது
மந்திரத்தில்
சிக்கி
விட்டாளா?
உடனே
எழு.
எங்களுடன்
இணைந்து
மாயங்கள்
செய்பவன்,
மாதவத்துக்கு
சொந்தக்காரன்,
வைகுண்டத்துக்கு அதிபதி என்றெல்லாம் அந்த
நாராயணனின்
திருநாமங்களைச் சொல்.
விளக்கம்:
விளக்கம்:
உலக மக்கள்
மாடமாளிகை,
பஞ்சு
மெத்தை
என
சொகுசு
வாழ்க்கையில்
சிக்கி
சோம்பலில்
கட்டுண்டு
கிடக்கின்றனர். இதில் இருந்து அவர்களை
மீட்டு
பகவானின்
இருப்பிடமான
வைகுண்டமே
நிலையானது
என்பதை
அறிவுறுத்த
வேண்டும்.
அந்த
வைகுண்டத்தை
அடைய பகவானின்
திருநாமங்களைச் சொல்ல வேண்டும்.
Pl recite tirupavai and tiruvempavai and stay blessed
No comments:
Post a Comment