Thursday, 27 July 2023

திருமண பொருத்தம் நாடி பொருத்தம் வாழ்விற்கு ஆதாரம் ஆரோக்கியமே. திருமணமான தம்பதிகள் தங்கள் ஆரோக்கியம் சிறப்பாக இருந்தால் தான் வாழ்வை இனிமையாக நகர்த்திச் செல்ல முடியும். சந்ததியை பெருக்க முடியும். குழந்தைகளை வளர்க்க முடியும். நாடி பிடித்து மருத்துவர்கள் ஆரோக்கியம் பற்றிக் கூறி விடுவார்கள். நமது ஜோதிட சாஸ்திரத்தில் நாடியை வைத்து இருவருக்கும் ஆரோக்கிய ரீதியாக பொருத்தம் உள்ளதா எனக் கூற இயலும். நமது உடலில் வாதம் பித்தம் கபம் என்று மூன்று தத்துவங்கள் செயல்படுகின்றன. நமது ஜென்ம நட்சத்திரம் மூலம் நமது நாடியை நாம் அறிய இயலும். ஒவ்வொரு நட்சத்திரமும் இந்த மூன்று தத்துவத்திற்குள் ஏதாவது ஒன்றில் அமையும். அதன் மூலம் நாடிப் பொருத்தம் கண்டு திருமணப் பொருத்தம் காணலாம்.

No comments:

Post a Comment