Thursday, 27 July 2023

திருமண பொருத்தம் நாடி பொருத்தம் வாழ்விற்கு ஆதாரம் ஆரோக்கியமே. திருமணமான தம்பதிகள் தங்கள் ஆரோக்கியம் சிறப்பாக இருந்தால் தான் வாழ்வை இனிமையாக நகர்த்திச் செல்ல முடியும். சந்ததியை பெருக்க முடியும். குழந்தைகளை வளர்க்க முடியும். நாடி பிடித்து மருத்துவர்கள் ஆரோக்கியம் பற்றிக் கூறி விடுவார்கள். நமது ஜோதிட சாஸ்திரத்தில் நாடியை வைத்து இருவருக்கும் ஆரோக்கிய ரீதியாக பொருத்தம் உள்ளதா எனக் கூற இயலும். நமது உடலில் வாதம் பித்தம் கபம் என்று மூன்று தத்துவங்கள் செயல்படுகின்றன. நமது ஜென்ம நட்சத்திரம் மூலம் நமது நாடியை நாம் அறிய இயலும். ஒவ்வொரு நட்சத்திரமும் இந்த மூன்று தத்துவத்திற்குள் ஏதாவது ஒன்றில் அமையும். அதன் மூலம் நாடிப் பொருத்தம் கண்டு திருமணப் பொருத்தம் காணலாம்.

Wednesday, 26 July 2023

திருமண பொருத்தம் வேதை பொருத்தம் வேதை என்றால் ஒன்றுகொன்று தாக்குதல் என்று பொருள். எனவே வேதையில் இருக்கும் நட்சத்திரங்கள் பொருந்தாது. வேதை பொருத்தம் என்பது, மாங்கல்ய பலத்தை குறிப்பது. கீழே எந்த நட்சத்திரத்திற்கு எந்த நட்சத்திரம் வேதை என்று கொடுக்கப்பட்டுள்ளது. ஒன்றுக்கொன்று வேதை இல்லாமலிருத்தலே வேதைப் பொருத்தம் எனப்படும்.

திருமண பொருத்தம் ரஜ்ஜூ பொருத்தம் திருமணத்திற்கு பார்க்கப்படும் 10 பொருத்தங்களில் முக்கியமானது ரஜ்ஜு பொருத்தம். அதாவது 10ல் 9 பொருத்தங்கள் இருந்தாலும், ரஜ்ஜு பொருத்தம் இல்லை என்றால் அந்த மண மக்களுக்கு திருமணம் செய்து வைக்க மாட்டார்கள்.

Thursday, 20 July 2023

திருமண பொருத்தம் வசிய பொருத்தம் கணவனுக்கும் மனைவிக்கும் ஒருவர் மீது ஒருவருக்கு அன்பு வாழ்நாள் முழுவதும் இருக்கவும், அது திசை திரும்பி வேறொருவர் மீது செல்லாமல் இருக்கவும் வசிய பொருத்தம் அவசியம். அப்பொழுது தான் ஒருவர் கருத்துக்கு மற்றொருவர் உடன்படுவர்.

ராசி அதிபதி பொருத்தம் --திருமணத்திற்காகக் கருதப்படும் முக்கியமான பத்துப் பொருத்தங்களில் ஐந்தாவது ராசி அதிபதி பொருத்தம். திருமணம் செய்யப்போகும் ஆண் மற்றும் பெண்ணின் ஜன்ம நட்சத்திரங்களின் அதிபதிகள் ஒருவருக்கொருவர் நட்பாக இருக்க வேண்டும் என்பதைக் குறிக்கிறது. அவர்களின் பிறந்த நட்சத்திர அதிபதிகளுக்கு இடையே நட்பு இருந்தால், அது ஒரு வளமான உறவு மற்றும் சந்தானம் ஆகியவற்றை ஏற்படுத்தும்.